/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைநீர் வெளியேற்ற தோண்டப்பட்ட பள்ளம்
/
மழைநீர் வெளியேற்ற தோண்டப்பட்ட பள்ளம்
ADDED : அக் 23, 2025 04:18 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அலுவலகம் எதிரே மழைநீர் வெளியேற தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் திறந்த நிலையில் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
சிவகங்கை நகராட்சி 14வது வார்டில் உள்ள குறுக்கு தெருக்கள் 2, 3ல் இருந்து வெளியேறும் கழிவு நீர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஆத்தா ஊரணிக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைத்து ரோட்டை கடக்க குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாய் பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருக்களில் தேங்கியது. தேங்கும் நீரை வெளியேற்ற பள்ளம் தோண்டி பத்து நாட்களை கடந்தும் இன்னும் பணி முடிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.
பள்ளம் திறந்த நிலையில் இருப்பதால் கால்நடைகள், சிறுவர்கள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து பணியை முடிக்க வேண்டும்.
இந்த இரண்டு தெருக்களிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளின் முன்பு தான் இந்த கழிவு நீர் கால்வாய் செல்கிறது. கழிவுநீருடன் மழைநீர், பிளாஸ்டிக் குப்பை கலப்பதால்குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இந்த சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.