/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.விளாக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி
/
ஏ.விளாக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி
ஏ.விளாக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி
ஏ.விளாக்குளத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி
ADDED : நவ 02, 2025 10:27 PM

மானாமதுரை: மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் ஊராட்சிக்குட்பட்ட ஏ.விளாக்குளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக ஊருக்கு மத்தியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
தற்போது இக்குடிநீர் மேல்நிலை தொட்டியின் துாண்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியை இயக்குபவர்கள் கூட தினம் தோறும் அச்சத்துடனேயே சென்று குடிநீர் வினியோகம் செய்து வருகிற நிலையில் கிராம மக்கள் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.