/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் சம்பக சஷ்டி விழா
/
திருப்புத்துாரில் சம்பக சஷ்டி விழா
ADDED : நவ 02, 2025 10:27 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பகசஷ்டி விழா நவ.21ல் துவங்குகிறது.
இக்கோயிலில் மேற்கு நோக்கி எழுந்தருளும் பைரவர் யோகத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். இவருக்கு அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சம்பக சஷ்டி விழா 6 நாட்கள் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான சம்பக சஷ்டி விழா நவ., 21 அன்று துவங்குகிறது. அன்று காலை 9:00 மணி அஷ்டபைரவர் யாகத்துடன் துவங்குகிறது. காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, மதியம் 12:00 மணிக்கு அபிேஷகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். மீண்டும் மாலை 4:30 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் துவங்கும். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பூர்ணாகுதி, இரவு 7:15 மணிக்கு அபிேஷகம், இரவு 7:46 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து ஆறு நாட்களிலும் அஷ்டபைரவ யாகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.

