/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முழுமையாக செயல்படாத அருங்காட்சியகம்; கீழடி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
முழுமையாக செயல்படாத அருங்காட்சியகம்; கீழடி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
முழுமையாக செயல்படாத அருங்காட்சியகம்; கீழடி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
முழுமையாக செயல்படாத அருங்காட்சியகம்; கீழடி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : மார் 19, 2024 05:34 AM
மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கடந்த 2015ல் வைகை நதிக்கரை நாகரீகத்தை கண்டறிய ஆய்வு மேற்கொண்ட போது இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்கள், பயன்படுத்திய பொருட்கள், குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை வைத்து 18கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் இரண்டு ஏக்கரில் பத்து கட்டட தொகுதிகளுடன் கட்டப்பட்டு கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முற்பட்ட தமிழர் நாகரீகத்தை காண உலகம் முழுவதிலும் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள்,தொல்லியலாளர்கள், மாணவ, மாணவியர்கள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர்.
ஒரு வருடத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகள்கீழடி அகழாய்வை தெரிந்து கொள்ளும் வண்ணம் 15 நிமிடங்கள்ஓடக்கூடிய அளவில் அகழாய்வில் ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தொல்லியலாளர்கள் கருத்துகளுடன் ஒளி, ஒலிபரப்பட்டது.
30 நிமிடத்திற்கு ஒரு முறை மினி ஏ.சி., தியேட்டரில் ஒலி, ஒளிபரப்பான இந்த குறும்படம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக குறும்படம் திரையிடப்படவில்லை. தியேட்டரில் ஏ.சி., உள்ளிட்ட சாதனங்கள் ஒரே வருடத்தில் பழுதானதால் இயங்கவில்லை என கூறப்படுகிறது. இன்று வரை அதனை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.
பத்து கட்டடங்களில் ஆறு கட்டட தொகுதிகளில் 13 ஆயிரத்து 684 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கட்டட தொகுதிகளின் முதல் மாடியிலும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் மாடிக்கு செல்ல லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக லிப்ட்டும் பழுதாகி முதியோர்கள் முதல்மாடிக்கு செல்ல முடியாமல்தவிக்கின்றனர்.அருங்காட்சியகததில் நான்கு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஒரு மாதமாக தண்ணீர் வராதது குறித்து படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து ஒரே ஒரு இடம் மட்டும் சரி செய்யப்பட்டுள்ளது.
எனவே நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. கட்டடதொகுதிகளில் மினி விசிறிகள் இல்லை. ஒரே ஒரு கட்டட தொகுதி மட்டும்தான் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மின் விசிறி, குளிர்சாதன வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே தொல்லியல் துறை கீழடி அருங்காட்சியகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

