/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் காலையில் அலைமோதிய கூட்டம்
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் காலையில் அலைமோதிய கூட்டம்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் காலையில் அலைமோதிய கூட்டம்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் காலையில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஆக 30, 2025 03:59 AM

காரைக்குடி: திருச்சியிலிருந்து காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் பாசஞ்சர் ரயிலில், காலை நேரத்தில் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் என கூட்டம் அதிகமாக உள்ளதால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில், திருச்சியில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை திருமயம் வழியாக காரைக்குடிக்கு தினமும் காலை 8:33 மணிக்கு வருகிறது.
தொடர்ந்து கல்லல் சிவகங்கை மானாமதுரை பரமக்குடி ராமநாதபுரம் பாம்பன் வழியாக ராமேஸ்வரத்திற்கு மதியம் 12:25 மணிக்கு செல்கிறது.
மீண்டும் ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 6:00 மணிக்கு
வருகிறது. சிவகங்கை கலெக்டர் ஆபீஸ், பெண்கள் கல்லூரி உட்பட, பரமக்குடி ராமநாதபுரம் பகுதிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் காலை நேரத்தில் பிளாட்பாரம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே ஒரு பெண்களுக்கான பெட்டி மட்டுமே உள்ளதால், இடவசதியின்றி வயதானவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் கூட்டத்தில் நின்றபடி செல்ல வேண்டி உள்ளது.
எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்கவோ அல்லது கூடுதலாக பெண்களுக்கான பெட்டிகள் பொருத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.