/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டவராயன்பட்டியில் புதிய நெற் களம் தேவை
/
கண்டவராயன்பட்டியில் புதிய நெற் களம் தேவை
ADDED : மார் 04, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டியில் புதிய நெற்களம் அமைக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.
கண்டவராயன்பட்டியில் பிலவா கண்மாய் மூலம் 230 ஏக்கர், பதுவயல் மூலம் 75 ஏக்கர், நாரமுத்து ஏந்தல் மூலம் 100 ஏக்கர், பள்ளிமுட்டி கண்மாய் மூலம் 50 ஏக்கர் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
இதற்காக நெல் அடிக்கவும், உலர்த்தவும் இரு நெல் களங்கள் இருந்தன. பல ஆண்டுகால பயன்பாட்டில் களங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் புதிதாக இரு நெல்களங்கள் கட்ட இப்பகுதி விவசாயிகள் கோரியுள்ளனர்.

