/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்குறிச்சியில் நுாறு நாள் பணியாளர்கள் வெட்டிய குளம்
/
கல்குறிச்சியில் நுாறு நாள் பணியாளர்கள் வெட்டிய குளம்
கல்குறிச்சியில் நுாறு நாள் பணியாளர்கள் வெட்டிய குளம்
கல்குறிச்சியில் நுாறு நாள் பணியாளர்கள் வெட்டிய குளம்
ADDED : நவ 22, 2024 04:16 AM

மானாமதுரை: கல்குறிச்சியில் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதையடுத்து கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை பார்க்கும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அப்பகுதியில் தரிசாக கிடக்கும் அரசு நிலத்தில் அரசின் அனுமதியோடு புதிதாக குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணியில் முற்றிலும் இயந்திரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் மனித சக்தியை கொண்டு குளம் வெட்டும் பணியில் பெண் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து 100 நாள் பெண் பணியாளர்கள் கூறியதாவது:90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பெய்யும் மழையினால் குளத்திற்கு சிறுக,சிறுக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர்.