/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கிடப்பில் உள்ள பன்றிகளை பிடிக்கும் திட்டம்
/
திருப்புவனத்தில் கிடப்பில் உள்ள பன்றிகளை பிடிக்கும் திட்டம்
திருப்புவனத்தில் கிடப்பில் உள்ள பன்றிகளை பிடிக்கும் திட்டம்
திருப்புவனத்தில் கிடப்பில் உள்ள பன்றிகளை பிடிக்கும் திட்டம்
ADDED : நவ 04, 2024 07:07 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை பிடிக்கும் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்புவனம் வட்டார கிராம கண்மாய்கள் ஒவ்வொன்றிலும் 50க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக குடியேறி விவசாயத்தை அழித்து வருகின்றன. திருப்புவனம் பகுதியில் இரவில் வளர்ந்துள்ள நெல் நாற்றுகளை வேருடன் பிடுங்கி போடுவது, நெல் தூவிய நாற்றங்காலை சேதப்படுத்துவது, வாழை, தென்னங்கன்றுகளை சேதப்படுத்துவது என பன்றிகளால் பாதிப்பு அதிகரித்துள்ளன. இப்பகுதியில் 3,000 எக்டேரில் நெல் பயிரிட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 500 எக்டேர் மட்டுமே நெல் நடவு செய்து, இரவில் காவல் காத்து வருகின்றனர்.
புதிதாக தென்னை மரங்களை நட முடியவில்லை. பன்றிகளை பிடிக்க வலியுறுத்தி விவசாயிகள் மார்ச் 13ம் தேதி திருப்புவனம் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடத்தினர். தாசில்தார் விஜயகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பெரம்பலுாரில் இருந்து பன்றிகள் பிடிக்கும் குழு வரவழைத்து, பிடிக்கப்படும் என தெரிவித்தனர்.
ஆனால், இக்கூட்டம் முடிந்து பல மாதங்களாகியும், பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பன்றிகளால் நஷ்டம் ஏற்பட்டால் இழப்பீடும் கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும் கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்து கொண்டுள்ள நிலையில் பன்றிகள் விவசாய நிலங்களுக்கு வர வாய்ப்புண்டு. பன்றிகளால் விவசாய பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.