ADDED : பிப் 15, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடி ரோட்டில் பள்ளங்களை சீரமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்துார்- சிங்கம்புணரி ரோட்டிலிருந்து 2 கி.மீ. துாரமுள்ள மணக்குடிக்கு ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் பல இடங்களில் தார் பெயர்ந்து பள்ளமாக காணப்படுகிறது. சில இடங்களில் ரோட்டோர மண் சரிந்து ரோடு சிதையத் துவங்கியுள்ளது.
அதிகமான வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. பகலில் சமாளித்து சென்றாலும் இரவில் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

