ADDED : ஜூலை 16, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் அனைத்து கிராமங்களிலும் உள்ள பஸ் நிறுத்தங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் அவற்றின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு பெயர்ந்து விழத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து நிழற்குடைகளிலும் 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்நிலையில் இந்த நிழற்குடைகளில் செய்யப்பட்டிருந்த 'பேட்ஜ் ஒர்க்' பெயர்ந்து சுவர்களில் மீண்டும் வெடிப்பு தெரியத்துவங்கியுள்ளது. சில நிழற்குடைகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மீண்டும் பேட்ஜ் ஒர்க் செய்யாமல் பழைய நிழற்குடை கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

