ADDED : பிப் 14, 2025 07:19 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள கடைகள் திறக்கப்படாததால் மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்கள் இரவில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்று பஸ் ஏறுவதற்கே அச்சப்படுகின்றனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ரூ.1.95 கோடியில் புதுப்பிக்கும் பணி 2023 மார்ச் 8 துவங்கி 18 கடைகள், தரைதளம், கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் முடிந்து பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆனால் கட்டப்பட்டுள்ள 18 கடைகள் மட்டும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தும் மது பிரியர்கள் அப்பகுதியை பாராக மாற்றியுள்ளனர். மது அருந்துவது மட்டும் இல்லாமல் அங்கேயே போதையில் அலங்கோல நிலையில் துாங்குகின்றனர்.
இதனால் பெண்கள் சிரமப்படுகின்றனர். ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடை திறப்பது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் விரைவில் டெண்டர் விட்டு, திறக்கப்படும் என்கின்றனர்.

