/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வழியில் பெண்ணை இறக்கிய கண்டக்டரை எதிர்த்து முற்றுகை
/
வழியில் பெண்ணை இறக்கிய கண்டக்டரை எதிர்த்து முற்றுகை
வழியில் பெண்ணை இறக்கிய கண்டக்டரை எதிர்த்து முற்றுகை
வழியில் பெண்ணை இறக்கிய கண்டக்டரை எதிர்த்து முற்றுகை
ADDED : ஜன 03, 2024 06:14 AM
காரைக்குடி: காரைக்குடியில் டவுன் பஸ்சில் பயணம் செய்த பெண்ணை, கண்டக்டர் ஒருமையில் பேசியதால், உறவினர்கள் பஸ்சை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி அருகே உள்ள கோவிலுார் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர். தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவர் காரைக்குடி செல்வதற்காக நேற்று, நெசவாளர் காலனியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறியுள்ளார்.
அதிக கூட்டம் இருந்ததால் அந்த பெண் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் நின்றபடி திணறினார். இதனைப் பார்த்த டவுன் பஸ் கண்டக்டர் , ஏறி உள்ளே வா இல்லை என்றால் கீழே இறங்கு என்று ஒருமையில் பேசியதோடு, பாதி வழியில் பஸ்சை நிறுத்தி கீழே இறங்கிச் செல்ல கூறியுள்ளார். இது குறித்து அந்த பெண் தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
புது பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்த டவுன் பஸ்சை அந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து கண்டக்டர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதால் இருவரையும் சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால், தினம் தினம் பெண்கள் பல்வேறு அவமானங்களை சந்திக்க நேரிடும் நிலை ஏற்படுகிறது.