/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுஞ்சாலைத்துறையில் உள்ளிருப்பு போராட்டம்
/
நெடுஞ்சாலைத்துறையில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : அக் 26, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தாராபுரம் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து சிவகங்கையில், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை நெடுஞ்சாலை கோட்டபொறியாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் முத்தையா பங்கேற்றனர்.