/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் கண்மாய் உடைப்பு
/
சிங்கம்புணரியில் கண்மாய் உடைப்பு
UPDATED : டிச 10, 2024 03:16 AM
ADDED : டிச 10, 2024 03:14 AM

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்மாய் உடைப்பால், தண்ணீர் வெளியேறி 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் பெய்த கனமழையால் இப்பகுதி பாலாற்றில் தண்ணீர் ஓடுகிறது. வேங்கைப்பட்டி அருகே 80 ஏக்கர் பரப்புள்ள புதுக்கண்மாய் நிரம்பியது.
![]() |
இதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய மடையில் டிச. 8ல் தண்ணீர் கசிய தொடங்கியது. விவசாயிகள் கூடி உடைப்பை சரி செய்ய முயன்றனர். இரவு பகலாக முயற்சித்தும் எதுவும் செய்ய முடியவில்லை.
![]() |
நேற்று மதியம் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் ஆயக்கட்டுக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கின. முழு தண்ணீரும் வெளியேறியபின்னரே மடையை சரிசெய்ய முடியும் என்ற சூழல் உள்ளது. அடுத்து வரும் மழையிலும் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



