/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதார் சேவை மையத்தில் ஊழியர்களின்றி தவிப்பு
/
ஆதார் சேவை மையத்தில் ஊழியர்களின்றி தவிப்பு
ADDED : ஆக 16, 2025 02:33 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி வளாகத்தில் ஆதார் மையம் பூட்டி கிடப்ப தால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மக்களுக்கு எளிதாக ஆதார் கார்டு எடுத்து தருதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு சார்பில் எல்காட் நிறுவனம் மூலம் காரைக்குடி மாநகராட்சி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை நகராட்சிகள், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் போன்ற இடங்களில் ஆதார் சேவை மையமும், அரசின் கேபிள் டி.வி., நிறுவனம் சார்பில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி, தனியாக கம்ப்யூட்டர் சென்டர், தேசிய வங்கிகளில் இம்மையங்கள் இயங்கி வருகின்றன.
எல்காட் நிறுவனம் சார்பில் சிங்கம்புணரி, திருப்பு வனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆதார் மையத்திலும் குறைந்தது 40 முதல் அதிக பட்சம் 70 பேர் வரை பெயர் திருத்தம், முகவரி மாற்றத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையத்திற்கு ஊழியர் வராததால் பூட்டி கிடக்கிறது.
சிவகங்கை நகர் மக்கள் ஆதார் கார்டு எடுக்கவோ, திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
எல்காட் நிறுவன அதிகாரி கூறியதாவது:
சிவகங்கை நகராட்சி வளாக ஆதார் மைய ஊழியர், மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். அவருக்கு மாற்றாக விரைவில் ஒரு நபரை நியமிக்க உள்ளோம். அவருக்கான ஒப்புதல் டில்லியில் இருந்து கிடைத்ததும், சிவகங்கை நகராட்சி வளாகத்தில் ஆதார் சேவை மையம் செயல்படும், என்றார்.

