/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் ஜூலை 28 ல் ஆடித்தேர்
/
திருக்கோஷ்டியூரில் ஜூலை 28 ல் ஆடித்தேர்
ADDED : ஜூலை 09, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம் ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை19 காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி ஆண்டாளுடன் திருவீதி உலாவும் நடைபெறும். பத்தாம் நாளான ஜூலை 28ல் ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தில் ஆண்டாள், சுவாமி எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
ஜூலை 29 காலை தீர்த்தவாரி, இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி,ஆண்டாள் திருவீதி வலம் வந்து ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.