/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வருக்கு ஏ.பி.வி.பி., கேள்வி
/
முதல்வருக்கு ஏ.பி.வி.பி., கேள்வி
ADDED : டிச 27, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணகுமார் அறிக்கை:
அண்ணா பல்கலைக்குள் மாணவர்கள் அல்லாத தி.மு.க., நிர்வாகிகள் இரவில் வந்து செல்ல யார் அனுமதித்தது. சி.சி.டி.வி., கேமராக்கள் வேலை செய்யாதது ஏன். மற்ற விஷயங்களில் முதலில் குரல் கொடுக்கும் தமிழக முதல்வர், எம்.பி., கனிமொழி, துணை முதல்வர் உதயநிதி இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன். துணை வேந்தர்கள் இல்லாததால் குற்றவாளிகளின் கூடாரமாக பல்கலைகள் மாறி வருகின்றன.
உடனடியாக காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

