/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் விபத்து

ADDED : ஜூன் 19, 2025 02:36 AM

மானாமதுரை: மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானா மதுரையில் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஒட்டிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் தினம் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மானாமதுரையில் ரோட்டின் இருபுறங்களிலும், ரோட்டை ஒட்டியுள்ள சர்வீஸ் ரோட்டிலும் ஆங்காங்கே சரக்கு வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். சரக்கு வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டாலும் அங்கு நிறுத்துவதில்லை.
சில நேரங்களில் அதிகாலையில் டிரைவர்கள் எதிர்பாராத விதமாக ரோட்டில் நிற்கும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலையில் அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.