/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து
/
வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து
ADDED : டிச 10, 2025 09:06 AM
திருப்புவனம்: திருப்புவனம் வழியாக செல்லும் பஸ்கள் போட்டி போட்டு கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் பலரும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளை ஏற்றுவதற்காக போட்டி போட்டு கொண்டு வேகத்தில் செல்கின்றனர். சாலை விதிகளை பின்பற்றாமல் நெரிசல் மிகுந்த நகருக்குள் அதி வேகத்தில் செல் கின்றனர்.
அசுர வேகத்தில் செல்லும் பஸ்களை கண்டு விலக முற்படும் போது நடந்து செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். தனியார் பஸ் படிகளில் கூட்டமாக தொங்கி கொண்டு வருபவர்களும் சாலையோரம் நிற்பவர்கள் தட்டி விட்டு செல்வதால் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் திருப்புவனம் வேன் ஸ்டாண்ட் அருகே சாலையோரம் சைக்கிளில் வந்த வெங்கடாசலபதி 65, என்பவரை வேகமாக வந்த தனியார் பஸ் இடித்ததில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பஸ்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். விதிகளை மீறி அசுர வேகத்தில் இயக்கப்படும் பஸ்கள் மீது போக்குவரத்து போலீசார் , வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

