/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மயான பாதை இல்லை தவிப்பில் கிராம மக்கள்
/
மயான பாதை இல்லை தவிப்பில் கிராம மக்கள்
ADDED : டிச 10, 2025 09:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் காளாப்பூர், மற்றும் சதுர்வேதமங்கலம் கிராமங்களுக்கு உட்பட்ட மயானங்கள் அப்பகுதி வழியாக ஓடும் பாலாற்றங்கரையில் உள்ளது.
மழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி மயானத்திற்கு இறந்தவர்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த இரு கிராமங்களிலும் மயானத்திற்கு செல்ல பாலத்துடன் கூடிய பாதை அமைத்து தர அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

