/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டோரத்தில் மூடாத தொட்டியால் விபத்து அச்சம்
/
ரோட்டோரத்தில் மூடாத தொட்டியால் விபத்து அச்சம்
ADDED : ஜூலை 18, 2025 11:53 PM

திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக ரோட்டோரங்களில் கட்டப்பட்டுள்ள கேட்வால்வு தொட்டிகளை கான்கிரீட் சிலாப்களால் மூட வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புத்துார் பகுதியில் நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகளில் ரோட்டோரங்களில் 'கேட் வால்வு' பகுதியில் சிறு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
சிமென்ட் கட்டுமானத்தில் உள்ள இத்தொட்டிகள் பணி முடிந்தும் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் கால்நடைகள், இரு வாகனங்கள் கடக்கும் போது விழும் வாய்ப்பு உள்ளது.
பலமான கான்கிரீட் சிலாப் அமைத்து தொட்டியை மூட குடிநீர் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.