/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் விபத்து: விழிப்புணர்வு இல்லாததால் உயிர் பலி
/
நான்கு வழிச்சாலையில் விபத்து: விழிப்புணர்வு இல்லாததால் உயிர் பலி
நான்கு வழிச்சாலையில் விபத்து: விழிப்புணர்வு இல்லாததால் உயிர் பலி
நான்கு வழிச்சாலையில் விபத்து: விழிப்புணர்வு இல்லாததால் உயிர் பலி
ADDED : ஜன 02, 2025 05:04 AM
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி ஐயாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இப்பாதையை கடந்து சென்று வருகின்றன.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் கீழடி, திருப்புவனம், வன்னிகோட்டை, டி.பாப்பான்குளம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் கிராமங்களை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் நேரிடுகின்றன.
கிராமப்புறங்களில் இருந்து வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையை சந்திக்கும் போது வாகனங்களை நிறுத்தி இருபுறமும் நன்கு கவனித்த பின் சாலையை கடக்க வேண்டும்.ஆனால் நடைமுறையில் யாரும் அதனை பின்பற்றுவதே இல்லை.
டூவீலர், ஆட்டோ, வேன், லாரி, டிராக்டர், கார் என அனைத்து வாகன ஓட்டிகளும் வேகத்தை குறைக்காமல் அப்படியே நான்கு வழிச்சாலையில் நுழைகின்றனர். இதனால் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்குறுக்கே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் துாதை விலக்கு, படமாத்துார் விலக்கு, பிரமனுார் விலக்கு உள்ளிட்ட இடங்களில் குறுக்கே வந்த வாகனங்களால் நான்கு வழிச்சாலையில் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கின.
எனவே மாவட்ட நிர்வாகம் நான்கு வழிச்சாலை அருகே உள்ள கிராமங்களில் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அல்லது சாலை சந்திப்புகளில் தடுப்பு வைக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.