/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கடை வீதி ஆக்கிரமிப்புகளால் தினமும் விபத்துக்கள் அதிகரிப்பு...
/
கடை வீதி ஆக்கிரமிப்புகளால் தினமும் விபத்துக்கள் அதிகரிப்பு...
கடை வீதி ஆக்கிரமிப்புகளால் தினமும் விபத்துக்கள் அதிகரிப்பு...
கடை வீதி ஆக்கிரமிப்புகளால் தினமும் விபத்துக்கள் அதிகரிப்பு...
ADDED : ஜூலை 26, 2025 03:43 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி கடைவீதியில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளால் நாள்தோறும் விபத்துக்கள் தொடர்கிறது.
காரைக்குடி ---- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பி லிருந்து செல்லும் 4 ரோடுகளிலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. 2014ல் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் இப்பேரூராட்சியில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடுகளில் டூ வீலர், பொருட்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ள நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலை அகலப்படுத்தப்பட்ட போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு சாதகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே வடிகால்களை அமைத்தனர். இதனால் பல இடங்களில் சாலைகள் வளைந்தும், குறுகியும், 10 முதல் 20 அடி வரை ஆக்கிரமிப்புக்குள் சிக்கி உள்ளது.
குறுகலான சாலையில் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக தினமும் விபத்துக்கள் நடப்பது சர்வ சாதாரணமாகிறது. சாலை அகலப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் ஏராளமானோர் விபத்தில் பலியாகியும் காயமடைந்தும் உள்ளனர். போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தாலும் விபத்துக்கள் குறையவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்றாததே தொடர் விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். காரைக்குடி - - திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும், வேங்கைப்பட்டி ரோடு, மேலூர் ரோடுகள் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலும் இருக்கும் நிலையில் இரு துறை அதிகாரிகளுக்கும் இடையே நிலவும் ஈகோ காரணமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
நெடுஞ்சாலைத்துறை களத்தில் இறங்காததால் பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு ஆபத்தான முறையிலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
எனவே விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்துகளை தடுக்க வேண்டும்.

