/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்
/
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள்
ADDED : மே 28, 2025 11:34 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் ரோட்டில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தாமல் பொறுப்பை தட்டி கழிப்பதில் உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் ரோட்டில் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. வாரச்சந்தை, தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களில் மீதமாகும் காய்கறி கழிவுகளை உண்டு வாழும் இவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவற்றால் இடையூறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ரோட்டில் திரியும் மாடுகள் பலவும் ஊனமுற்ற மாடுகளாகவும், நடக்க முடியாத மாடுகளாகவும் உள்ளன. ஒருசில மாடுகள் மட்டும் ஆக்ரோஷமாக அவற்றிற்கு இடையில் நடுரோட்டில் சண்டையிடுவது, ரோட்டில்நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் மீது மோதி காயம் ஏற்படுத்தி வருகின்றன. மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டி கழித்து வருகின்றன.
திருப்புவனத்தில் ரோட்டில் திரிவது கோயில் மாடுகள் என்றும் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் தான் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் மாடுகள் அவைகளுக்குள் மோதி கொண்டு ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்கள் உள்ளிட்டவற்றையும் முட்டி தள்ளி விட்டு சேதத்தை ஏற்படுத்துகின்றன.
மாடுகள் நடுரோட்டில்நின்று கொண்டு நகர மறுக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும்ஏற்பட்டு, அவசரத்திற்கு எந்த வாகனங்களும் செல்ல முடிவதில்லை. பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த காரணமும் கூறாமல் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.