/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையின் நடுவே மின்கம்பம் இரவில் தொடரும் விபத்துக்கள்
/
சாலையின் நடுவே மின்கம்பம் இரவில் தொடரும் விபத்துக்கள்
சாலையின் நடுவே மின்கம்பம் இரவில் தொடரும் விபத்துக்கள்
சாலையின் நடுவே மின்கம்பம் இரவில் தொடரும் விபத்துக்கள்
ADDED : செப் 27, 2025 04:05 AM

காரைக்குடி: பள்ளத்துாரில் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மின்கம்பம் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காரைக்குடி கோட்டையூர் பள்ளத்துார் தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ், சாலைப் பணி நடந்தது. நேமத்தான்பட்டி முதல் தேவகோட்டை ரஸ்தா வரை 15 கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தது. இப்பணியின் போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்த பின்பு சாலை அகலப்படுத்தும் பணியை தொடர வேண்டும். ஆனால் மின் கம்பங்கள் அகற்றப்படாமலேயே , சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. பணி முடிந்து பல நாட்களாகியும் இதுவரை மின்கம்பம் அகற்றப்படவில்லை. இரவு நேரங்களில், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் நிலவுகிறது.