/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அகலமில்லாத சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்
/
அகலமில்லாத சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்
ADDED : ஜூலை 10, 2025 11:45 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அகலம் குறைவான சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
இவ்வொன்றியத்தில் மருதிப்பட்டியில் இருந்து சூரக்குடி செல்லும் சாலையில் சில இடங்களில் அகலம் குறுகியதாக உள்ளது. ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு அகலப்படுத்தப்படாமல் உள்ளது.
இச்சாலை வழியாகத்தான் பொன்னமராவதியில் இருந்து மருதிப்பட்டி வழியாக மதுரை செல்லும் பேருந்துகளும், கனரக வாகனங்களும் சென்று வருகிறது. சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
குறிப்பாக முறையூர் பாலம் அருகே விபத்துக்கள் நடக்கிறது. இரவில் டூவீலரில் வருபவர்கள் பலர் விழுந்து காயமடைந்துள்ளனர்.
இச்சாலையை விரைந்து அகலப்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.