sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மூன்று ஆண்டு ஆய்வுபடியே பயிர் இழப்பீடு வழங்கப்படும் மத்திய வேளாண் அமைச்சர் தகவல் 

/

மூன்று ஆண்டு ஆய்வுபடியே பயிர் இழப்பீடு வழங்கப்படும் மத்திய வேளாண் அமைச்சர் தகவல் 

மூன்று ஆண்டு ஆய்வுபடியே பயிர் இழப்பீடு வழங்கப்படும் மத்திய வேளாண் அமைச்சர் தகவல் 

மூன்று ஆண்டு ஆய்வுபடியே பயிர் இழப்பீடு வழங்கப்படும் மத்திய வேளாண் அமைச்சர் தகவல் 


ADDED : பிப் 13, 2024 06:31 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ; ''பயிர் காப்பீடு திட்டத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை என்பதை மாற்றி, 3 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆய்வு படியே இழப்பீடு தொகை வழங்கப்படும்,'' என மத்திய வேளாண், விவசாய நலன் இணை அமைச்சர் ேஷாபா கரந்தலஜே தெரிவித்தார்.

சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மாவட்ட வேளாண்மை அதிகாரிகளுடன், மத்திய வேளாண் மற்றும் விவசாயநலன் இணைஅமைச்சர்ேஷாபா கரந்த்லஜே ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாய வளங்களை பெருக்க, விவசாயிகளுக்கான மத்திய அரசு திட்டங்கள் கிடைப்பதில் தடங்கல் உள்ளதா என கேட்டறிந்தார்.

வறட்சிக்கு இலக்காகும் திட்டங்களை பயன்படுத்தி, வேளாண் வளர்ச்சி பணிகளை செய்வது, முருங்கை இலை பவுடர், முருங்கை விதை, எண்ணெய் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு, குறித்து தெரிவித்தார்.

பயிர் காப்பீடு திட்டத்தில், வருடாந்திரகணக்கீடை, 3 ஆண்டாககுறைத்து கணக்கிட உள்ளனர். 3 ஆண்டு சராசரியை கணக்கிட்டு பயிர் காப்பீடு வழங்கப்படும்.

இயற்கை விவசாயிகளை அதிகளவில் ஊக்கப்படுத்தி, பூச்சி மருந்து இல்லாத இயற்கை விவசாயத்தை கொண்டு வந்து, மனித வளத்தை பாதுகாக்க வேண்டும். இது போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்தியஅரசு வேண்டிய நிதி ஒதுக்கும். நெல் சாகுபடி முறைக்கான நிதி மத்தியஅரசு மூலம் மாநில அரசுக்கு அனுப்பபடுகிறது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் சக்திவேல், விற்பனை துறை தமிழ்செல்வி, பயிர் காப்பீடு திட்ட அதிகாரி ஐரீன், துணை இயக்குனர் சுருளிமலை பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us