/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்
/
கீழடி அருங்காட்சியகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்
ADDED : மே 01, 2025 01:15 AM

கீழடி:சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தி, மகளுடன் பார்வையிட்டார்.
கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 13 ஆயிரத்து 484 பொருட்கள் ஆறு கட்டட தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை 4:00 மணிக்கு அருங்காட்சியகம் வந்த சிவகார்த்திகேயன் ஆறு கட்டட தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். பொருட்கள் குறித்து கீழடி அகழாய்வு தள இணை இயக்குனர் அஜய் விளக்கமளித்தார். அருங்காட்சியகத்தில் பண்டைய கால பொருட்கள் குறித்த புடைப்புச் சிற்பங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றின் முன் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

