/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பொங்கல் கொண்டாடிய நடிகை கவுதமி மடப்புரத்தில் சுவாமி தரிசனம்
/
சிவகங்கையில் பொங்கல் கொண்டாடிய நடிகை கவுதமி மடப்புரத்தில் சுவாமி தரிசனம்
சிவகங்கையில் பொங்கல் கொண்டாடிய நடிகை கவுதமி மடப்புரத்தில் சுவாமி தரிசனம்
சிவகங்கையில் பொங்கல் கொண்டாடிய நடிகை கவுதமி மடப்புரத்தில் சுவாமி தரிசனம்
UPDATED : ஜன 17, 2026 07:02 AM
ADDED : ஜன 17, 2026 05:51 AM

சிவகங்கை: அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராம மக்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்.
சிவகங்கையில் பிரசித்தி பெற்ற ராணி வேலுநாச்சியார் வரலாற்றை அறிந்து கொள்ளவும், தென் மாவட்ட கிராமத்தில் இந்த ஆண்டு பொங்கலை கொண்டாடும் நோக்கில், நடிகை கவுதமி சிவகங்கைக்கு வந்திருந்தார்.
சிவகங்கை அரண்மனையில் அவருக்கு மன்னர் கல்வி நிறுவன பள்ளிக்குழு தலைவர் ஆர்.மகேஷ்துரை வரவேற்பு அளித்தார். அங்கு ராணி வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை கேட்டு அறிந்து கொண்டார். மேலும் அரண்மனை முன் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்திற்கு சென்ற கவுதமி அங்கு கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.
மேலும் அங்கிருந்த ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி காளைகளை ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தார். கூத்தாண்டன் கிராம மக்கள் நடிகை கவுதமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருப்புவனம் : நேற்று காலை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அ.தி.மு.க., சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், சீட் கிடைக்க வேண்டி மடப்புரத்தில் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

