/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி அவசியம்: உள் நோயாளிகள் வருகை அதிகரித்ததால் கோரிக்கை
/
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி அவசியம்: உள் நோயாளிகள் வருகை அதிகரித்ததால் கோரிக்கை
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி அவசியம்: உள் நோயாளிகள் வருகை அதிகரித்ததால் கோரிக்கை
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி அவசியம்: உள் நோயாளிகள் வருகை அதிகரித்ததால் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2025 11:48 PM

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகள், 6 தாய்சேய் நல மருத்துவமனைகள், 1 காசநோய் மருத்துவமனைகளில் 72 டாக்டர்கள், 143 நிரந்தர மற்றும் 76 தற்காலிக நர்சுகள், 17 நர்சு உதவியாளர்கள், 16 துாய்மை பணியாளர்கள், 31 மருந்தாளுனர்களே பணிபுரிகின்றனர். இம்மாவட்ட அளவில் அரசு மருத்துவமனைகளில் மாதத்திற்கு 4,153 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கென ஒட்டுமொத்தமாக மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 849 படுக்கைகள் மட்டுமே உள்ளன. நோயின் தன்மைக்கேற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், குணமடைந்தாலும், குணமடையாவிட்டாலும், டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, அடுத்த உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க துவங்குகின்றனர். மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகளின்றி தரையில் படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துகளில் காயமடைந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் போது வெளி மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். இம்மாவட்ட அளவில் அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக மாதத்திற்கு 1.72 லட்சம் பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அம்மை நோய் உள்ளிட்ட நோய் பரவலின் போது நோயாளிகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரிக்கும், மாவட்டத்திலேயே திருப்புவனம் அரசு மருத்துவமனையில்தான் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 29 ஆயிரத்து 908 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மதுரை, விருதுநகர் மாவட்ட கிராமங்களில் இருந்தும் சிகிச்சைக்கு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளிலும் உரிய வசதிகள் அதிகப்படுத்த வேண்டும். கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர். எனவே நோயாளிகள் வருகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள், பரிசோதனைகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
/////