/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மாதமாக பொறுப்பு அலுவலரே நிர்வாகம்
/
மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மாதமாக பொறுப்பு அலுவலரே நிர்வாகம்
மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மாதமாக பொறுப்பு அலுவலரே நிர்வாகம்
மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆறு மாதமாக பொறுப்பு அலுவலரே நிர்வாகம்
ADDED : பிப் 11, 2025 05:06 AM
மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகம் அண்ணாதுரை சிலை அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை சுற்றுவட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மற்றும் அருகே உள்ள கிராம பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்களது சொத்து, பல்வேறு வகை பத்திரங்களை பதிவு செய்து வருகின்றனர். தினம்தோறும் 30க்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
சார் பதிவாளர் அலுவலகம் மிகவும் பழமை வாய்ந்த கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் பதிவாளர் பணியிடம் 6 மாதமாக காலியாக உள்ள நிலையில் தற்போது வரை நிரந்தர பதிவாளர் பணியிடம் நிரப்பப்படாமல் பொறுப்பு பதிவாளர்கள் மாறி, மாறி வருவதால் பத்திரங்கள் பதிவதற்கு குழப்ப நிலை ஏற்பட்டுஉள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள், பத்திர எழுத்தர்கள்கூறியதாவது:
பொறுப்பு பதிவாளர்மூலம் பத்திரங்கள் பதியப்படும் நிலையில் பொறுப்பு பதிவாளர்கள், பத்திரம் பதிய வருபவர்களிடம் போதிய சான்று இணைக்கப்பட்டு இருந்தாலும் அவர்களை வேறு சான்று கேட்டு அழைக்கழிப்பு செய்கின்றனர். பொறுப்பு பதிவாளர் விடுமுறை எடுத்தால் அவருக்கு பதிலாக மாற்று பதிவாளர் வருவதற்கு தாமதமாவதால் பத்திரங்கள் பதிவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
சர்ச்சைக்குரிய பத்திரங்கள் பதிவு செய்வதில் இடங்களை பார்த்து தணிக்கை செய்வதற்கும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
இதுகுறித்து மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:
மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.விரைவில் நிரந்தரமாக பதிவாளர் பணியிடம் நிரப்பப்படும் என்றனர்.