நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: முடிகண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர்கள் சீர்வரிசையுடன் வருகை புரிந்து மாணவர் சேர்க்கை ஊர்வலம் மற்றும் மாணவர் சேர்க்கை விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் அமலிபிரான்ஸிஸ்கா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் பாலாமணி முன்னிலை வகித்தனர். புதிதாக 10 மணவர்கள் சேர்ந்தனர்.
தமறாக்கி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் பாலாமணி தலைமை வகித்தார்.ஊராட்சி தலைவர் ரவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் குமரேசன் வரவேற்றார். புதிதாக 10 மாணவர்கள் சேர்ந்தனர்.
ஆசிரியர்கள் மோகன், சகாயடெய்சி, ரேவதி. சுகன்யா, அனிதா, மணிமொழி கலந்துகொண்டனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் உமாராணி நன்றி கூறினார்.

