/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாம்பவிகா பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
சாம்பவிகா பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : ஜூன் 25, 2025 01:01 AM

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் கேஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
10ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்று அந்தந்த பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
480 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு 75 சதவீத கட்டணச் சலுகையும், 470 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
கேஜி வகுப்பில் சேரக் கூடிய மாணவர்களுக்கு பஸ் கட்டணம் கிடையாது. கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு பள்ளி பேருந்தில் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
புதிதாக சேரும் மாணவர்களில் தாய் தந்தை இவர்களில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு. புதிதாக 6 மற்றும் 9ஆம் வகுப்பு தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. பள்ளி பேருந்தில் கட்டணச் சலுகை உண்டு.
புதிதாக 7,8 பிளஸ் 1 வகுப்பு தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டணத்தில் சிறப்புச் சலுகை உண்டு. புதிதாக எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை சேர்க்கும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 2 மாணவர்களில் 1 மாணவருக்கு பள்ளி பேருந்தில் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
1 முதல் பிளஸ் 2 வரை கணினி பயிற்சி வகுப்பு நடைபெறும். மாணவர்களின் கல்வி அறிவை மட்டும் வளர்க்காமல் அவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளான யோகா, செஸ், கராத்தே, சிலம்பம், ஸ்போக்கன் இங்கிலீஸ், பரதநாட்டியம் வகுப்பு நடத்தப்படுகிறது.
சிவகங்கை நகர், சக்கந்தி, இடையமேலுார், கண்டாங்கிபட்டி, தமராக்கி, குமாரபட்டி, மலம்பட்டி, மானாமதுரை, வேம்பத்துார், பச்சேரி, தாயமங்கலம், மறவமங்கலம், ஆண்டிச்சூரணி, காளையார்கோவில், நாட்டரசன் கோட்டை, கீழப்பூங்குடி, ஒக்கூர், மதகுபட்டி, சாத்தரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ், வேன் வசதி உண்டு.
இது தவிர பிற ஊர்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் வேன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என பள்ளி செயலர் சேகர் தெரிவித்துள்ளார்.