ADDED : அக் 18, 2024 05:14 AM
சிவகங்கை: அ.தி.மு.க., 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிவகங்கை எம்.ஜி.ஆர்., சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.
கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் ராஜா, நகர் செயலாளர் ராஜா பங்கேற்றனர். கட்சி ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழு சார்பிலும் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இளையான்குடி, சிங்கம்புணரி, திருப்புத்துார் உள்ளிட்ட பகுதியிலும் நடந்தது.