/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க.,விற்கு இளைஞர்கள் தேவை
/
அ.தி.மு.க.,விற்கு இளைஞர்கள் தேவை
ADDED : அக் 19, 2024 11:43 PM
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில்இருந்ததற்கு அடிப்படை உறுப்பினர்களின் களப்பணி தான் காரணம். தொலைக்காட்சி ஆதரவுஇல்லாமல் 53ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க கிளைச் செயலாளர்களே காரணம்.
உள்ளாட்சி, சட்டசபைத் தேர்தலில் வலுவான கட்டமைப்பை அமைக்க களத்தில் உங்களோடு இணைந்து பணியாற்றுபவர்களை உருவாக்க வேண்டும்.
காங். தமிழகத்தில் அழிந்ததற்கு காரணம் காங்.ல் 40 வயதிற்குட்பட்ட நிர்வாகிகளே கிடையாது.அதிகப்படியான இளை ஞர்களை அ.தி.மு.க.,விற்கு கொண்டு வர உங்களால் தான் முடியும்.
அமைப்புத் தேர்தல் நடத்தும் போதும், ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் நியமிக்கப்படும் போதும் இளை ஞர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட செயலர் செந்தில்நாதன் எம்.பி, அவைத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.