/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி: முன்னாள் அமைச்சர்
/
தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி: முன்னாள் அமைச்சர்
தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி: முன்னாள் அமைச்சர்
தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டி: முன்னாள் அமைச்சர்
ADDED : பிப் 02, 2024 01:09 AM
சிவகங்கை:''வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்,'' என, சென்னையில் பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்தியதை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் பழனிசாமி தமிழகத்தை நான்கரை ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவர் ஆட்சி செய்த நான்கரை ஆண்டுகளும் எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு ஓடிப்போகவில்லை. கோடநாடு வழக்கில் பழனிசாமியை ஒன்றும் செய்ய முடியாது.
எம்.பி., தேர்தலில் அனைத்துத்தொகுதிகளிலும் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும். தி.மு.க., பொய் வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி எவற்றையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க., ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பள்ளி அருகே கஞ்சா புழக்கம் அதிகமாகி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
அ.தி.மு.க., தலைமையை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும். இல்லையேல் தனித்து போட்டியிடுவோம். தேர்தல் பணி செய்ய தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

