ADDED : மே 25, 2025 11:03 PM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் விற்பனை, வணிகத்துறை சார்பில் வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குனர் தமிழ்செல்வி வரவேற்றார். துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பத்மாவதி, கலெக்டர் பி.ஏ., (விவசாயம்) தனலட்சுமி, உரிம சான்று உதவி இயக்குனர்சக்தி கணேஷ் விழிப்புணர்வு அளித்தனர்.
மதிப்பு கூட்டப்பட்டு இயந்திரங்கள் 35 சதவீத மானியத்தில் பெறுவதற்கான பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு, குறு நிறுவன திட்டத்தில், 3 சதவீத வட்டி மானிய திட்டங்களை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்யும், சந்தை ஏற்படுத்தப்படும் என விளக்கம் அளித்தனர்.
இயற்கை உணவகம், அங்காடி முருகன், சேதுபதி ஆகியோர் மற்ற விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் குறித்து விவரித்தனர். நேரடி விற்பனை குறித்து அன்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்வதற்கான ஆலோசனையை சீட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் ஜீவானந்தம் வழங்கினார். கருத்தரங்கு ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர்கள் செய்திருந்தனர்.