ADDED : ஜூன் 28, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி சார்பில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வேளாண் வளர்ச்சி பற்றிய விழா தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.
சேது பாஸ்கரா கல்லூரி தாளாளர் கந்தப்பழம், கண்டரமாணிக்கம் சேது பாஸ்கரா தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜா, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முன்னிலை வகித்தனர். வேளாண் கல்லுாரி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
வேளாண் கல்லூரி செயல் அலுவலர் கோவிந்தராஜன், ஆலோசகர் தர்மராஜ் வேளாண்மை கல்வி பற்றி எடுத்துரைத்தனர். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி போதைப் பொருள் விழிப்புணர்வு, பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது பற்றி விளக்கினார்.