/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விவசாய கல்வி பயிற்சி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விவசாய கல்வி பயிற்சி
ADDED : டிச 18, 2024 06:36 AM
சிவகங்கை, : தமறாக்கி, இடையமேலுார் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மதுரை தமிழ்நாடு அரசு விவசாய கல்லுாரியில் விவசாய கல்வி சார்ந்த 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகங்கை அருகே தமறாக்கி, இடையமேலுாரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சியாக விவசாய நிலங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நெல் நடவு, இயற்கை உரம் தயாரித்தல் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களை மதுரையில் உள்ள தமிழ்நாடு விவசாய கல்லுாரிக்கு 10 நாள் பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையத்தில் முதல்வர் மகேந்திரன் தலைமையில், மேலாளர் பரத்குமார் மாணவர்களுக்கு தேனீ, காளான், மீன் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், இனிப்பு மற்றும் பேக்கரி வகைகள் தயாரித்தல், உணவு பொருட்கள் பதப்படுத்துதல், நாற்றங்கால் பராமரிப்பு, கால்நடை பராமரிப்பு, தீவனம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டன.
விவசாய ஆசிரியர்கள் கோபிநாதன், ஆனந்தன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
10 நாட்கள் பயிற்சி பெற்ற 33 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.