/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போர்வெல் தண்ணீரில் விவசாயப்பணி துவக்கம்
/
போர்வெல் தண்ணீரில் விவசாயப்பணி துவக்கம்
ADDED : செப் 19, 2025 02:05 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பருவமழை திருப்தியாக இல்லாத நிலையில் போர்வெல் தண்ணீரைக் கொண்டு சாகுபடி செய்பவர்கள் மட்டும் விவசாயப் பணிகளை துவக்கியுள்ளனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியை நம்பியுள்ளனர். இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாத நிலையில் கண்மாய்களில் இன்னும் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இன்னும் உழவுப் பணியை துவக்கவில்லை.
சில நாட்களாக லேசாக பெய்த மழையைக் கொண்டு போர்வெல், கிணறு மூலம் பாசனம் செய்பவர்கள் நேற்று விவசாயப்பணிகளை துவக்கினர். ஆனாலும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே போர்வெல் விவசாயமும் பயன்தரும், மழை குறைந்தால் பயிர் விளைச்சல் குறைந்து விடும், என்கிறார்கள் விவசாயிகள்.