/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காத்திருக்கும் மின்அபாயம் அச்சத்தில் கைவிடப்பட்ட விவசாயம்
/
காத்திருக்கும் மின்அபாயம் அச்சத்தில் கைவிடப்பட்ட விவசாயம்
காத்திருக்கும் மின்அபாயம் அச்சத்தில் கைவிடப்பட்ட விவசாயம்
காத்திருக்கும் மின்அபாயம் அச்சத்தில் கைவிடப்பட்ட விவசாயம்
ADDED : ஏப் 18, 2025 05:43 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விவசாயத்தையே கைவிடும் அவலத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் மு.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட அம்மிக்கண்மாய் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன.
சீதம்பை ஊரணி முதல் அம்மிவயல் வழியாக அரை கி.மீ., தூரத்திற்கு மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அந்த பகுதியில் நடமாடவே விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
அவ்வழியாக கால்நடைகளை ஓட்டிச்செல்லவும் முடியவில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்து உடைந்து விழலாம் என்பதால், மின்வாரிய ஊழியர்கள் கம்பிகளை இழுத்தும் கட்டுவதில்லை.
எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்கலாம் என்ற பயத்தால் இக்கம்பிகள் செல்லும் பகுதிகளில் சாகுபடி செய்வதையே விவசாயிகள் சிலர் தவிர்த்து வருகின்றனர். புதிய மின்கம்பங்கள் ஊன்றி தாழ்வாக செல்லும் கம்பிகளை உயர்த்தி கட்ட பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.