/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை மழையில் உழவு செய்ய வேளாண் அதிகாரி ஆலோசனை
/
கோடை மழையில் உழவு செய்ய வேளாண் அதிகாரி ஆலோசனை
ADDED : மே 06, 2025 06:54 AM
சிவகங்கை: மாவட்டத்தில் பெய்யும் கோடை மழையை வைத்து, நிலங்களில் கோடை உழவு செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என வேளாண் இணை இயக்குனர் மதுரைச்சாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் ஆண்டு தோறும் 1 லட்சம் எக்டேரில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலான நிலப்பரப்பு பருவ மழையை நம்பியே உள்ளது.
எனவே கோடையில் பெய்யும் மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து வைக்க வேண்டும். பயிர் அறுவடையானதும் கோடை உழவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மழைக்கு பின் செய்ய வேண்டும். நிலச்சரிவில் குறுக்காகவும், மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவு செய்ய வேண்டும்.
2 முதல் 3 ஆண்டிற்கு ஒரு முறை சட்டிக்கலப்பை உழவு செய்ய வேண்டும். கோடை உழவு மூலம் மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கும். மண் அரிமானம் கட்டுப்பட்டு, சத்துக்கள் விரயமாவது தடுக்கப்படும்.
கடலை சாகுபடி விவசாயிகளுக்கு சவாலாக உள்ள சிகப்பு கம்பளிப்புழு அறிக்கப்படும். காற்றோட்டம், நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும். மண்ணில் பூசானங்கள் செலவின்றி அழிக்கப்படும். தற்போது கோடை மழை பெய்து வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்யலாம், என்றார்.