/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., வெளிநடப்பு
/
மானாமதுரை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., வெளிநடப்பு
மானாமதுரை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., வெளிநடப்பு
மானாமதுரை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., வெளிநடப்பு
ADDED : நவ 29, 2024 05:44 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் வாகனங்களுக்கு டீசல் போடுவதில் முறைகேடு நடைபெறுவதாகவும்,4 மாதங்களுக்கு ஒரு முறை நகராட்சி கூட்டம் நடத்துவதால் குறைகளை கூற முடியாமல் போவதாக கூறி அ.தி.மு.க., பா.ஜ., கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், மேலாளர் பால கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் வரவேற்றனர்.
கூட்டம் துவங்கியவுடன் அ.தி.மு.க., கவுன்சிலர் தெய்வேந்திரன், டிராக்டர்களில் குப்பையை அள்ளி சென்று எடை போடுவதிலும்,டீசல் போடுவதிலும் ஊழல் நடைபெறுவதாக கூறி வெளிநடப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்களான இந்திரா, அமுதா வெளிநடப்பு செய்தனர்.இதனைத் தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் நமகோடி(எ) முனியசாமி
4 மாதங்களுக்கு ஒரு முறை நகராட்சி கூட்டம் நடத்துவதால் கவுன்சிலர்கள் தங்களது குறைகளை கூற முடியாமல் போவதால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போவதாக கூறி அவரும் வெளிநடப்பு செய்தார்.
*தலைவர், மாரியப்பன் கென்னடி,தி.மு.க.,
ஊழல் நடைபெற வாய்ப்பில்லை, இனி வரும் காலங்களில் மாதந் தோறும் நகராட்சி கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து விவாதம் நடந்தது.
கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

