ADDED : மே 08, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், அமைப்புச் செயலாளருமான சீனிவாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர்கள் கட்சிப் பணி குறித்து விளக்கினார்.
மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாநில பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மாவட்ட விவசாய அணி செயலாளர் போஸ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் அழகர்சாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், திருஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.