ADDED : ஜூலை 12, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்திற்காக சிவகங்கை வருவதையொட்டி அவரை வரவேற்கவும், பிரசார பயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் சீனிவாசன், பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் உமாதேவன், கருணாகரன், தமிழ்செல்வன், பார்த்திபன், கோபி, சங்கர் ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கற்பகம், ராமச்சந்திரன், குணசேகரன், நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் இளங்கோவன், ஜாக்குலின், குழந்தை ஒன்றிய செயலாளர்கள் சிவாஜி, செல்வமணி, பழனிசாமி, ஸ்டீபன் அருள்சாமி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் வக்கீல் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.