/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
குடியிருப்புகளை சூழ்ந்த கழிவு அ.தி.மு.க., கவுன்சிலர் போராட்டம்
ADDED : செப் 23, 2025 04:12 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி யில் மழைநீர், கழிவு நீர் பிரச்னை மீது நட வடிக்கை இல்லாததால் அ.தி.மு.க., கவுன்சிலர் கழிவுநீரில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
காரைக்குடி 27வது வார்டு பகுதிக்குட்பட்ட பாரதி தெரு, காளவாய் பொட்டல், அன்னை தெரசா தெரு, தேவர் குடியிருப்பு, என்.எஸ்.கே தெரு உள்ளிட்ட பகுதி களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப் படாததால் மழைக்காலங்களில் சாக்கடை தேங்கி வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. தவிர கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்து கிடப்பதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் இல்லை.
நேற்று காலை 7:00 மணிக்கு அப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ் கழிவு நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். மாநகராட்சி பணியாளர்கள் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.