/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிதிலமடைந்த பண்ணை திருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
/
சிதிலமடைந்த பண்ணை திருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
சிதிலமடைந்த பண்ணை திருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
சிதிலமடைந்த பண்ணை திருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
ADDED : செப் 23, 2025 04:12 AM
சிவகங்கை: திருப்புத்துார் அருகே பண்ணைதிருத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் அலு வலகத்தில் புகார் தெரி வித்தனர்.
திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியம், மேலபட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணை திருத்தி கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 12 மாண வர்கள் வரை படிக்கின்றனர். இங்கு 50 ஆண்டுக்கு முன் கட்டிய ஓட்டு கூரையின் கீழ் மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆரம்பத்தில் 30 மாணவர்கள் வரை படித்த பள்ளிக்கு புதிய கட்டடம் இன்றி, பழைய கட்டடத்தில் இயங்குவதால் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர் மட்டுமே பணி புரிகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பண்ணைதிருத்தி அரசு துவக்கப்பள்ளி செயல்படும் பழங்கால ஓட்டு கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய பள்ளி கட்டடம் கட்டித்தர வேண்டும் என பண்ணை திருத்தி, உதிரபட்டி கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர்.