/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க., நிற்காத ரயில்போல் ஓடும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேச்சு
/
அ.தி.மு.க., நிற்காத ரயில்போல் ஓடும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேச்சு
அ.தி.மு.க., நிற்காத ரயில்போல் ஓடும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேச்சு
அ.தி.மு.க., நிற்காத ரயில்போல் ஓடும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : டிச 29, 2024 04:23 AM
சிவகங்கை: அரசியலில் அ.தி.மு.க., நிற்காத ஜெட் வேக ரயில் போன்று சென்று கொண்டே இருக்கும் என சிவகங்கையில் கட்சியின் அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., பேசினார். -
சிவகங்கையில் நடந்த அண்ணாதொழிற்சங்க பேரவை பதவிக்கு விருப்ப மனு வழங்கும் விழா நடந்தது.
செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், திருநெல்வேலி மண்டல செயலாளர் ராமையா முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது, அ.தி.மு.க., போராட்ட அரசியலுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து மக்களுக்கான பிரச்னைகளை கையில் எடுத்து போராடுகிறது.
2026 தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றிபெற வைத்து பழனிசாமியை முதல்வராக அமர வைக்க தொழிற்சங்கத்தின் பங்களிப்பும் உள்ளது. அ.தி.மு.க., போராட்ட களத்திற்கு தயாரானால் தான், தி.மு.க., ஆட்சியை வீழ்த்த முடியும்.
நிற்காத ரயில் போல் நாம் தான் மக்களின் பிரச்னைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெறும், என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், நாகராஜன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், குழந்தை, காரைக்குடி மண்டல செயலாளர் நாகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், சிவாஜி, கோபி, சேவியர்தாஸ், நகர் செயலாளர் ராஜா பங்கேற்றனர்.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

