ADDED : செப் 28, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
இளையான்குடி, செப்.29-
இளையான்குடி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் தடுப்பு முறைகள், பரிசோதனையின் அவசியம், சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை மருத்துவர் செந்தில் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.ஆலோசகர் ரஞ்சித் குமார், சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
