ADDED : செப் 28, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,செப்.29-
சிவகங்கை தமிழவையம் வாசிப்பு வட்டம் சார்பில் நுால் அறிமுக விழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைவர் பகிரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சகுபர் நிசாபேகம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ெஹலன் எழுதிய மெளனமுகை எனும் கவிதை நுாலை ஆசிரியர் பாலமுருகன் அறிமுகம் செய்து பேசினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மகாபிரபு எழுதிய விருந்து எனும் கட்டுரை நுாலை செயலர் சுரேஷ் அறிமுகம் செய்து பேசினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் இளங்கோவன், மருத்துவத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன், ஆசிரியர் ஜெயப்பிரியா கலந்து கொண்டனர். கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
